"வேகமாய் முடிந்ததுவே வாழ்க்கை" - மீளாத்துயரில், புனிதா

 


முந்தி வந்த அத்தான் எங்கள் மூத்த தலைவன் அவர்

மச்சாள் என அழையாமல் சகோதரர்  மாதிரி எங்களை

பெயர் சொல்லி அழைப்பீர்களே அத்தான்

அன்புடன் பண்புடன் பாசமாய் ஓர் குடும்பமாய் எங்களுடன் சேர்ந்து வாழ்ந்தீர்களே அத்தான்

குடும்பத்திற்கு பெருமைதேடி குலவிளக்காய் இருந்தீர்களே

ஆசிரியராய் கல்வி பயின்று கணிதமுடன் விஞ்ஞானம் ஆங்கிலம் போன்றவற்றை வீட்டினிலே கல்வி நிலையம் அமைத்து வித்தைகள் பல  காட்டி விளக்காய் போதித்தார்களே

ஏடு முதல் A \ L வரை கல்விக்கு உரம் ஊட்டி கல்விக்கு வழிசமைத்தீர்களே

விசுவாச வாழ்க்கையில் கிறிஸ்தவ பணிக்கு நீங்கள் செய்த அளப்பெரிய பணி மேலானது

சமூகத்திற்கு நீங்கள் செய்த தொண்டு சமூக மக்கள் உங்கள் வீட்டிக்கு வரும்போது அவர்களுடன் நீங்கள் கதைக்கும் அன்பான வார்த்தை அவர்களுக்கு நீங்கள் செய்யும் கொடைகளை நாங்கள் எவ்வாறு மறப்போம் அத்தான்

நேரம் பாராது காலம் பாராது எங்களுக்கும் சமூகத்திற்கும் செய்த பணி அளப்பெரியது அத்தான்

வேகம் விவேகமானது அல்ல என்பது போல் உங்கள் வாழ்வு வேகமாய் முடிந்ததுவோ என துயரில் அழுகிறோம்.

 

மீளாத்துயரில்,

புனிதா

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"God’s Comfort and Strength in Our Times of Grief" - Ebenezer Veerasingam

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா