“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா

 


கர்த்தருக்குள் நித்திரையடைந்த டானியேல் வீரசிங்கம் அண்ணனை பற்றிய நினைவுகளை இந்த நேரத்தில் நான் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்புக்காக கத்தருக்கு நன்றி செலுத்துகின்றேன்.

இவர் எனது கணவரின் மைத்துனர். அதோடு எனது நெருங்கிய நண்பியின் கணவர். இப்படியிருந்தும் திருமணம் ஆனவுடன் வெளியூர் சென்றதினால் எனக்கு அவரோடு பழக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 1999ஆம் ஆண்டு முதல் முறையாக குடும்பமாக இலங்கைக்கு வந்தோம். நாட்டின் பிரச்சனை காரணமாக வெளியிடங்களுக்கு செல்ல முடியவில்லை. அண்ணனின் வீட்டில்தான் தங்கியிருந்தோம். இந்த நேரத்தில்தான் எனது மகனும் நானும் வீரசிங்கம் அண்ணனுடன்  நன்கு பழக சந்தர்ப்பம் கிடைத்தது.

அண்ணனின் அன்பு, கடவுள் பக்தியுள்ள நல்ல உள்ளம், ஏழைகளுக்கு இரங்கி அவர்களுக்கு உதவிசெய்கின்ற கரம், அன்பான வார்த்தைகள், இவையெல்லாம் எங்களை கவர்ந்தன. அதுமட்டுமல்லாமல் உறவினர்களுக்கும், ஊர் மக்களுக்கும் அவர் ஆற்றிய சேவைகள் அளப்பெரியது. எனது மகன் நாட்டிக்கு புதிதாய் வந்ததினால் எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டுவதில் அக்கறை கொண்டார். தனது நேரத்தையும் பொருட்படுத்தாமல் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும், ஊர்மக்களுக்கும் அவர் ஆற்றிய சேவை பெரிது. ஆலயப்பணிகளிலும் தனது ஊக்கத்தை காண்பித்தார்.

இப்படிப்பட்ட நற்குணங்களை கொண்ட அண்ணனின் வாழ்க்கைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். அவரின் பிரிவால் மனம் வாடித்தவிக்கின்ற குடும்பத்தினர், உற்றார், உறவினர்களை கத்தர்தாமே ஆற்றித் தேற்றவேண்டி நிறைவு செய்கின்றேன்.

 

இப்படிக்கு,

உடன்பிறவா சகோதரி சலா, 

(சலா, சீலன், ரஜீவ் - கனடா)

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"நினைவலைகள்…" - உடன்பிறவா சகோதரன், த. அ. பத்மசீலன்