மருமகன் கணேஷின் நினைவின் சில பக்கங்கள்

 

    இருபத்து நான்கு வருட அறிமுகத்தில் என்னுடன் அன்புடனும் பண்புடனும் பழகி ஆறுதல் வார்தைகளுக்கூடாக எங்களை நேசித்து வீட்டிற்கு வரும் போதும் போகும் போதும் இன்முகத்துடன் வரவேற்று ,வழியனுப்பி வைத்ததையெல்லாம் மறக்கவே முடியாது.

    உங்களுடன் ஒரே வீட்டில் இருந்த அந்த குறுகிய நாட்களில் அதிகாலை ஐந்து மணிக்கு தேனீருடன் வந்து தோள்களில் தட்டி “கணேஷ் எழும்புங்கோ” என்று கூறும் அன்பான வார்த்தையை என்னால் மறக்க முடியாதுள்ளது .

    உங்களது இறுதி நாட்களில் வைத்தியசாலையில் அனுமதித்த அன்று “கணேஷ் சுடுபாண்  வா ங்கி வாங்கோ”என்று நீங்கள் கூறிய போது அதை வாங்கி உங்களுக்கு தந்து கொள்ள உங்கள் உடல் நிலை இடம் தரவில்லை.

    உங்கள் உணர்வின்போது “கூட்டிப்போக கணேஷ் வருமோ”என்று எதிர்பார்த்திருந்தீர்கள்.  இவ்வார்த்தைகள் எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும் .

    உங்கள் ஆத்மா சாந்திக்காக நானும் உங்கள் பிள்ளை ரதியும், உங்கள் பேரன் மகரிஷனும் இறைவனை பிராத்திக்கிறோம் .

 

இப்படிக்கு ,

அன்புள்ள மருமகன்,

கணேஷ் .

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"நினைவலைகள்…" - உடன்பிறவா சகோதரன், த. அ. பத்மசீலன்

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா