"நீங்காத நினைவில் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உத்தமர் வீரசிங்கம் சேர்." - குழந்தைவேல் சிவசிதம்பரம்

 


    சாந்தமான பார்வை பெருமையிலும் எளிமை நேர்மையின் சிகரம், எல்லோரையும் மதிக்கும் சுபாவம், கள்ளமில்லா மனம்,எப்போதும் இறை சிந்தனை ,ஆசிரியர் தொழிலுக்கு சான்று பகரும் முன்மொழி ஆசான்.

    பெருமையிலும் எளிமையாக வாழ்ந்து காட்டிய உத்தமர் .இறைதேசமும் தமிழ்பற்றும் கல்வியில் சிறந்த உயர்ந்த குடும்பத்தில் யாழ் மண்ணில் தொண்டைமானாற்றில் பத்து சகோதர சகோதரிகளுடன் இளமையை கழித்த வீரசிங்கம் சேர், கொழும்பு பல்கலைக்கழக பௌதிக விஞ்ஞான துறை பட்டதாரியாகி, மீன்பாடும் தேனாட்டை  நோக்கிய ஆசிரிய தொழிலின் நிமிர்த்தம் வந்து அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மத்திய  கல்லூரியில் சிறந்த ஆசானாக பல வருட காலம் சேவை புரிந்து கொண்டு இருக்கும் போது தேனாட்டின் சிறந்த தாதியாக கருணையுள்ளதுடன் சேவை செய்து கொண்டிருந்த மலர்  அம்மணியை கரம்பிடித்து உங்கள் உரித்தாக உதிர்த்த முத்தான பிறேமனுடன் மீன்பாடும் ஓசையுடன் கல்லடி பாலத்தின் அருகில் அமைந்த அழகிய வாசஸ்தலத்தில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடிர் என நோய் தழுவி எம்மை விட்டு பிரிந்து சென்ற வீரசிங்கம் சேரின் துள்ளிய பார்வையுடன் கூடிய சாந்தமான முகம் எம்  மனக்கண்ணின்  முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றது .

    உருவத்தில் மட்டுமல்ல உள்ளதாலும் மனிதனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய உத்தமர் .

    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. மனிதன் உயிர்கள் இடத்தில் உயர்ந்தவன், தேவனிடத்தில் தாழ்ந்தவன், ஆனால் சொல்லாலும் செயலாலும் உயரக்கூடியவர் என்று அன்பிலே பண்பிலே மனிதனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய உத்தமர் வீரசிங்கம் சேர்.

    எம்மை விட்டு பிரிந்தாலும் என்றும் அவர் நினைவு என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும்.

                                          ஓம் சாந்தி

குடும்ப நண்பன் ,

குழந்தைவேல் -சிவசிதம்பரம் ,

தாதிய பரிபாலகர்

 

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"நினைவலைகள்…" - உடன்பிறவா சகோதரன், த. அ. பத்மசீலன்

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா