"கண்ணீருடன் கவித்துளிகள்..." - கிறிசாந்தி

 


பத்து வருடங்களில் பழகிய

-          சில நாட்கள்

பண்பட்ட உங்கள் முகத்தில்

-          கண்டதும் புன்முறுவல்

எதைப் பேசுவதேன்று நான்

-          சிந்திக்குமுன்னே

 என்னவென்று நலம் கேட்பீர்

-          முந்திக்கொண்டு நீரே.

 

பக்கமாய் பழகிக்கொள்ள வந்தது கொரோனா

-          பழுகாமத்தில் கூடிக் குலாவ

சிறுபிள்ளைகள் குடும்பமாய் குதூகலிப்பு

-          காணும் போது உங்களுக்கு பூரிப்பு

என் மக்கட்கொரு ஆங்கில கணித பாட

-          வழிகாட்டல்

என்னைக் கண்டவுடன் குழந்தை வளர்ப்பு

-          கருத்தாடல்.

 

யாவருடனும் அளவளாவ அதீத ஆசை

-          அங்கிள் உங்களுக்கு

கடைசி சில நாட்களும் வைத்தியசாலை

-          விடுதி இல நான்கிலும்

உங்களுடன் நான் கழித்த பொன்னான

-          நேரத்தில்

என்னிடம் சொல்லியதோ பல

-          கருத்துக்கள்

இன்னும் என் காதில் கணீரென்று

-          ஒலித்துகொண்டே இருக்கிறதே.

மறக்கத்தான் முடியுமா - அந்த

            மலர்போன்ற நினைவுகளை

இறந்தாலும் வாழுமையா – உங்கள்

-          மணியான வார்த்தைகள் என்னுள்ளே.

 

மருமகள் கிறிசாந்தி

(திருமதி. கிறிசாந்தி சித்தார்த்தன்)

 

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"God’s Comfort and Strength in Our Times of Grief" - Ebenezer Veerasingam

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா