"நினைவலைகள்…" - உடன்பிறவா சகோதரன், த. அ. பத்மசீலன்

 

 

"அண்ண" என்றழைக்கவேண்டிய உம்மை

"அத்தான்" என்று நாம் அழைக்க, இன்று

எம்மையெல்லாம் "ஐயோ" எனக் கதறவிட்டுவிட்டு

நீங்கள் மட்டும் மண்ணினுள் மறைந்ததென்ன

 

உடன் பிறவா சோதரனே! வாழ்வில்

சோதனைகள் பல கண்டு

சோர்ந்து போகாமல் நீங்கள்

சொந்தக் காலில் எவர்க்கும் சோலியின்றி

இன்று சொர்க்கம் சென்றாயோ

 

பாரினில் பிறப்பும் இறப்பும் ஆண்டவர் செயல்

அதையும் மறந்து வெதும்புதடா எம்மனது

நீங்கள் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால்

பலரும் பல பயன்களை பெற்றிருப்போம்

 

தீர்க்கவொண்ணா நோயுன்னை தீண்டி

காலவன் கரங்களுக்கு பரிசளிக்க

நாவறண்டு எம்மையெல்லாம் கதறியழ வைத்ததுவே

உன் நினைவுகள்

 

பூமியிலே மீளாத் துயில்கொள்ளும் நீங்கள்

எமக்கும் சில காலம் எம் மண்ணுக்கும் செய்த தொண்டு

எம் மனங்களில் இறுதிவரை நிலைத்திருக்கும்.

அத்தான், உங்கள் ஆத்மா ஆண்டவர் சந்நிதியில்

சாந்தி கொள்ள வேண்டி நிற்கிறேன்.

 

இப்படிக்கு,

உங்கள் உடன்பிறவா சகோதரன்,

த. அ. பத்மசீலன்

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா