"சோதி மாமா…" - அன்பின் மருமகள், Christina Mercy

 


    சோதி மாமாவை நினைக்கும்போது எனக்கு எவ்வளவோ நல்ல இனிமையான நினைவுகள் மனதுக்கு வருகிறது. நாங்கள் ஜேர்மனியிலிருந்து தொலைபேசி ஊடாக பேசும்போதும் சரி, நேரே இலங்கைக்கு வந்து அவரோடு நேரங்கள் செலவழிக்கும்போதும் சரி, அவர் எங்களது படிப்பிலே, எங்களது அறிவு வளர்ச்சியிலே அதிகம் அக்கறை கொண்டவராக இருப்பார்.

    என்னுடன் அடிக்கடி English ல் பேசுவார். எனக்கு நல்ல ஞாபகம் உண்டு. நான் சின்ன பிள்ளையாக அங்கு வந்திருந்த நேரங்களில் எனக்கு English books வாங்கி தந்திருக்கிறார். நான் மட்டக்களப்பிற்கு வந்திருந்த நேரங்களில் அவர் எவ்வளவாக அன்பாக பேசி பழகுகிறார் என்பதையும், கஷ்டப்பட்டவர்களுக்கு எவ்வளவு உதவிகளைச் செய்கிறார் என்பதையும் அவதானித்து ஆச்சரியப்பட்டேன்; அது என் இருதயத்தைத் தொட்டது.

    கடைசியாக நான் எனது கணவரோடும் மகளோடும் வந்து சோதி மாமா குடும்பத்தோடு செலவழித்த சில நாட்கள் மறக்க முடியாதவை. எங்களை அவர் அன்பாக உபசரித்து கவனித்துக்கொண்டது மட்டுமல்லாது, எனது கணவர் சாமுவேலுக்கும் மாமாவை நன்றாக பிடித்துக்கொண்டது. அருமையான ஒரு மாமா with a big heart.

    அவருடைய பகிடிகளை மறக்க முடியாது. அதுபோலவே, மாமா மிக அழகாக பாடுவார். அவர் பாடுவதையும் மறக்க முடியாது. We are so grateful to God for blessing us with Sothy Mama. மாமா இப்பொழுது ஆண்டவரிடம் இருக்கிறார். அன்பான சோதி மாமாவை நினைத்து ஆண்டவருக்கு நன்றிகள் பல.

அன்பின் மருமகள்,

Christina Mercy

From Germany

Comments

Popular posts from this blog

"Remembering ‘Veerasingam Ayya’" - Dr. Philip G. Veerasingam

“My Teacher, Mr. Daniel Gnanasothy Veerasingam" - Rev. Kanapathippillai David Jebanayagam

“வீரசிங்கம் அங்கிள்,” நீங்கள் இல்லாத உலகில் நான் - அன்பு சித்தார்த்தன்

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

About My Good Friend from School Days, “Daniel.” - Mr. Elkanah Alagurajah

"Sothy Bappa’s Memorial" - Dr. Queenie Veerasingam

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

"ஜீவனின் அப்பம்" - Jeevanin Appam | Sung by Daniel G. Veerasingam

“கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள்” - உடன்பிறவா சகோதரி, சலா

அமரர் திரு.D.G. வீரசிங்கம் ஐயா அவர்களின் திருச்சபைப் பணி வாழ்விலே , என் நினைவில் உதித்த நினைவுகள் - R.G.தயாளன்