"நீங்கா நினைவுகளாய்..." - அன்புப் பிள்ளைகள், ஷரோன்,சோஜிகாந், மகரிஷன், பேரிசைப்பிரியா
அன்பின் பெப்பா, வாழ்கையில் பிரிவுகள் வருவது யதார்த்தமே.ஆனால் உம் பிரிவோ எங்கள் அனைவரையும் ஆழ்துயரில் ஆழ்த்தியதென்ன.. ? ? அன்பிலும் , பண்பிலும் , கண்டிப்பிலும் , கரிசனையிலும் உம்மை மிஞ்சுவதென்பது எவராலும் இயலாத காரியமே...எங்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல தகப்பனாகவும் , நண்பனாகவும் சிறந்த ஆலோசகராகவும் எங்கள் வாழ்கையின் வழிகாட்டியாகவும் இருந்தீங்க...காலையில் தினமும் நாங்கள் முதலில் கேட்கும் வார்த்தை “தம்பா...குஞ்சு...எழும்புங்கோனா...” என்பதே. ஆனால் கடந்த சில நாட்களாக நாங்கள் அந்த குரலை மீண்டும் ஒருமுறை கேட்கமுடியாதா என எண்ணித் தவித்த நாட்களுமுண்டு. நாங்கள் உங்கள் வீடு வரும் போது கூட எங்களை இன்முகத்துடன் வரவேற்று அன்பாக உபசரிப்பீர்களே பெப்பா..! எங்களுக்கு ஒரு தலைசிறந்த ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருந்தீங்க அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்க இப்ப எங்கள விட்டு பல மைல் தூரம் கடந்து சென்றிருந்தாலும் உங்கள் நினைவுகள் எம்மை விட்டு நீங்காது. ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பாங்கு மற்றும் வாயில்லா ஜீவன்களுக்கு இரங்கும் குணமும் உம்மிடம் இருந்து நாம் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள...